காப்பர் ஒயர்களை திருட முயன்ற 2 பேர் கைது
திருச்சி, மார்ச் 4 திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தெற்கு சீதேவிமங்கலத்தில் கடந்த 2 ம் தேதி இரவு 7.30 மணியளவில் வெடி மருந்து குடோனில் காப்பர் ஒயர்களை திருட முயன்ற இரண்டு வாலிபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவர் சிறுகனூர் அருகே தெற்கு சீதேவிமங்கலத்தில் வெடி மருந்து குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி இரவு 7.30 மணி அளவில் வெடி மருந்து குடோனில் உள்ள காப்பர் ஒயர்களை கத்தியால் அறுத்து திருட முயன்றுள்ளனர். இதைக் கண்ட வெங்கடேஷ் மற்றும் அவரது மேலாளர் இருவரையும் பிடித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா மரூர் புதுத்தெருவை சேர்ந்த ராஜேஷ் (36) மற்றும் அதே தாலுகா சாத்தனூர் வடக்கு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் (36) என தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனுர் போலீசார் இருவரையும் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்