பயணிகள் நிழற்குடை : சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
திருச்சி, மார்ச் 4 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் சரடமங்கலம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையினை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் இன்று திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் சரடமங்கலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனைப்படி புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.7.00 லட்சம் மதிப்பில் சரடமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.