ரேஷன் கடையில் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு

0 288
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சி கள்ளர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் 6 ம் தேதி இன்று மதியம் 12 மணி அளவில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. பாம்பு பிடி வீரர் பாம்பை உயிருடன் மீட்டார்.

பிச்சாண்டார்கோயில் ஊராட்சி கள்ளர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் வழக்கம் போல் ஊழியர் கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் கடை ஊழியர் மற்றும் பொதுமக்கள் பயத்தில் அலறி வெளியே ஓடி வந்தனர்.பின்னர் இது குறித்து பாம்பு பிடி வீரர் பூபேஷ் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த பாம்பு பிடி வீரர் பூபேஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கு முட்டைகளில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்து கொள்ளிடம் வனப்பகுதியில் விடுவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.