தமிழ்நாடு வளர்ச்சிக்கு பாடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : எம்.எல்.ஏ. பேச்சு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாடுபடுகிறார் – பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ பேச்சு.
திருச்சி, மார்ச் 6 தா.பேட்டை அருகே பிள்ளாபாளையம் கிராமத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொது கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பெரியசாமி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயாளர் மயில்வாகனன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் ராமசந்திரன், கே.கே.ஆர். சேகரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் ஷர்மிளா பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தேர்தல் பணி குழு செயலாளர் கடலூர் இல. புகழேந்தி சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் பேசும் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய், இலவச பேருந்து, சாலைவசதி, குடிநீர் வசதி, மேம்படுத்தபட்ட வசதிகளுடன் பேருந்து நிலைம், பள்ளி கட்டிடங்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலை உணவு திட்டம், மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் என சிறப்பான ஆட்சியை செய்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இரவும், பகலும் பாடுபட்டு வருகிறார். மத்திய அரசு தமிழக மக்களை அனைத்து விதத்திலும் வஞ்சித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியினை தராமல் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. தமிழக மக்களுக்கு ஒர வஞ்சனையாக செயல்படுகிறது. தமிழகத்திற்கு நன்மை செய்யும் ஆட்சியை மத்தியில் அமைக்க வேண்டுமானால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களாகிய நீங்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்து அமோக வெற்றியினை பெற்று தர வேண்டும் என்று பேசினார்.நலத்திட்ட உதவிகளாக 200 பேருக்கு வேஷ்டி , சேலைகள் வழங்கபட்டது. திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு, தர்மராஜ், சிவக்குமார், விஜயஆனந்த், திமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, சௌந்தரராஜன், ராஜசேகர், ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட மாணவரணி அகத்தீஸ்வரன், மகளிர் அணி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.