ஏரிகுளம், வடிகால் வாய்க்கால்களை தூர்வார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

0 267
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அளவிலான நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட குழு சந்திரமோகன், பாலகுமார், மூத்த நிர்வாகி சுப்பிரமணியன், கவுன்சிலர் சத்யா உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் சேகர், வீர விஜயன், முருகேசன் ,காமராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தா.பேட்டை ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி ,அரசு தொழிற்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும். புளியஞ்சோலை முதல் மகாதேவி ஏரி வரையிலான புதிய வாய்க்கால் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தா.பேட்டை ஒன்றியம் முழுவதும் ஏரி ,குளம், வடிகால் வாய்க்கால், வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும். தா.பேட்டை, மேட்டுப்பாளையம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை கூடுதலாக மருத்துவர்கள் நியமித்து தரம் உயர்த்த வேண்டும். தா.பேட்டை ஒன்றியத்தை வறட்சிப்பகுதியாக அறிவித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் விவசாயம் மேம்பட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்டது..கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நிதியாக இரண்டரை லட்சம் ரூபாய் மாவட்ட செயலாளர் ஜெயசீலனிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கிளைச் செயலாளர் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கிளைச் செயலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.