எஸ்.பி.ஐ. வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 410
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து திருச்சி மாநகர் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாக பயன்படுத்தி முறைகேடுகள் செய்த பாசிச பாஜக அரசை கண்டித்து திருச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத்தில் ஆளும் பாஜக மோடி அரசின் ஊழலுக்கு ஆதரவாக தேர்தல் பத்திர ஊழல் தடயத்தை மறைக்க முயலும் எஸ்பிஐ வங்கியை கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.