தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

0 249
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் கடந்த ஒரு வாரமாக பயிற்சி வகுப்புக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன்  நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நேற்று வழக்கு செய்து விசாரணை.

லால்குடி அருகே மணக்கால் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விமல்ராஜ்(21). இவரது தந்தை சிவக்குமார் திருச்சியில் ரயில்வே துறையில் உள்ள அசிஸ்டன்ட் லோகோ பைலட் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்காக ரூ.10 ஆயிரம் பணம் டெபாசிட் செய்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் இருந்துள்ளார் விமல்ராஜ். இதனை அவரது தந்தை சிவகுமார் கண்டித்துள்ளார்.இதனால் மனமுடைந்த விமல் ராஜ் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினார்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.