மணப்பாறை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் : எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

0 1,011
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7  திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள எப்.தொப்பம்பட்டி, தாதகவுண்டம்பட்டி, கார்வாடி, பளுவஞ்சி, வளநாடு, கொடும்பபட்டி, ஊனையூர், வைரம்பட்டி, பாலக்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் பேருந்து வசதி செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இன்று மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து வழித்தட துவக்க விழா நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்ததுடன் சிறிது தூரம் பேருந்தை தானே இயக்கிச் சென்றார். அப்போது நடத்துனரிடம் பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பயணக்கட்டணதிற்கான பணத்தை வழங்கி டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.