திருச்சியில் பழங்கால சிவாலயம் கண்டெடுப்பு

0 455
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 8 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கும்பக்குடியில், சிவாலயம் சிதைந்த நிலையில் புதர் மண்டிக் கிடந்தது. கிராம மக்களுடன் சேர்ந்து, சிவ வழிபாட்டுக் குழுவினர் இடிபாடுகளை ஒழுங்குபடுத்தி, சிவாலயத்தை மீட்டுள்ளனர். திருச்சியில் உள்ள ஒன்றிய அரசின் (எச்.ஏ.பி.பி) எச்.இ.பி. தொழிற்சாலையில் பணிபுரியும் தனசேகர் என்பவா, கும்பக்குடியில் கண்டறியப்பட்ட பழமையான சிவாலயம் குறித்து, ஆற்றுப்படை வரலாற்று அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தர்.
அங்கு ஆய்வு நடத்திய ஆற்றுப்படை வரலாற்று அமைப்பைச் சேர்ந்த பார்த்திபன் கூறியதாவது: கி.பி. 10-ஆம் நுற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலின் கல்வெட்டுகள் ஆங்காங்கு சிதைவுற்று காணப்படுகின்றன.
இக்கோயிலில் உள்ள விக்ரம சோழரின் கல்வெட்டு ஒன்றில், இந்த ஊர் குறித்த தகவல் உள்ளது. பாண்டிய குலாசனி வளநாட்டு தென்கரை பிரம்ம தேயம் ஸ்ரீசோழமாதேவி சதுர்வேதி மங்கலத்தின் உட்பிரிவாக இந்த ஊர் இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கும்பக்குடி என்றே உள்ளதால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், அதே பெயரிலேயே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.