குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

0 250
Stalin trichy visit

திருவள்ளுவர் நகரில் குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி, மார்ச் 8  திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (55).இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் துவரங்குறிச்சியில் நடந்து கொண்டிருக்கும் கோவில் திருவிழாவில் பங்கேற்க வருமாறு கணவரை அவரது மனைவி அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். இதை அவரது மனைவி கணவரை கண்டித்துள்ளார். இதனால் மனமடைந்த பாலகிருஷ்ணன் நேற்று மதியம் சேலையால் வீட்டின் கூரை கொக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.