அரசியல் ஆதாயத்திற்காக ஜெயலலிதாவை புகழும் பிரதமர் மோடி : திருநாவுக்கரசர் எம்.பி. குற்றச்சாட்டு

0 193
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 8  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசு கலந்து கொண்டு பார்வையிட்டார்..

பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
வரும் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி குறித்த பேச்சுவார்த்தை தி.மு.க வுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மீண்டும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளேன். கட்சியின் தலைமை அனுமதித்தால் மீண்டும் போட்டியிட உள்ளேன். இதே போல் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். சிகிச்சைக்கு பின் 3 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 100 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது வந்து பார்க்காத பிரதமர் மோடி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாத பிரதமர் தான் இப்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார் என்றால் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக தான் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.