துறையூரில் தொடர் திருட்டு சம்பவங்கள்: பொதுமக்கள் அச்சம்
திருச்சி, மார்ச் 8 திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியில் வசித்து வருபவர் ராணி (வயது 58) . சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக 6 ந்தேதி தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார். இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடப்பதை கண்டு ராணிக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்தா பீரோ உடைக்கபட்டு அதில் வைத்திருந்த சுமார் ஐந்து பவுன் நகை மற்றும் 5000 ம் ரொக்கம் திருடு போனாது தெரியவந்தது.
இதேபோல் இவர் வீட்டின் பின் பகுதியில் வசித்து வரும் ஜெயலட்சுமி சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்றுள்ளார் அவரது வீட்டையும் மர்ம நபர்கள் உடைத்து சென்ற பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கும் ஒரு லட்சம் உள்ளிட்டவை திருடு போயிருக்கலாம் என தெரிகிறது.
இது பற்றி வீட்டு உரிமையாளர் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு துறையூர் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் வந்து திருடு போன பொருட்களின் விவரங்களை தெரிவித்த பின்னரே உண்மையான திருடு போன பொருட்களின் விவரங்கள் தெரியவரும் என போலீஸ்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துறையூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது