சாலை விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் பலி
திருச்சி, மார்ச் 11 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வடுகன் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (36) இவரது மனைவி அனிதா (31) தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணி தன் குடும்பத்துடன் தாயுடன் திருச்சியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது மகளுக்கு விசேஷம் நடைபெற இருந்த நிலையில் சுப்ரமணி தன் மனைவி, மகள் மற்றும் தன் தாயுடன் சொந்த ஊரான ராசிபுரத்திற்கு நேற்று மாலை
தன் குடும்பத்தை காரில் அனுப்பி வைத்துள்ளார். பின்பு சுப்பிரமணி காரை தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து துறையூர் வழியாக ராசிபுரம் சென்றுள்ளார்.
வாகனம் உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி பகுதியில் செல்லும் போது வாழப்பாடியில் இருந்து எதிரே வந்த கார் சுப்பிரமணி மீது மோதியது இதனால் சுப்பிரமணி தூக்கி எறியப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 வாகனம் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மனைவி இது குறித்து அனிதா உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்ததில் காரை ஓட்டி வந்தது வாழப்பாடி சேசன் தெருவை சேர்ந்த பரத் என்பது தெரியவந்தது உப்பிலியபுரம் காவல்துறையினர் பரத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்