கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது
திருச்சி, மார்ச் 11 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள கரியமாணிக்கம் பிரிவு சாலையில் 9ம் தேதி நேற்று காலை 9. 15 மணி அளவில் நின்று கொண்டிருந்த கூலித் தொழிலாளியிடம் கத்தியை காட்டி ரூ. 200 பணம் பறித்த ரவுடியை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கொடியரசன்(28) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை 9.15 மணி அளவில் கரியமாணிக்கம் பிரிவு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சமயபுரம் அருகே புரத்தாக்குடி செபஸ்தியார் கோயில் தெருவை சேர்ந்த தமிழ் என்கின்ற தமிழ்செல்வன் (37) நான் ஒரு மிகப்பெரிய ரவுடி என கொடியரசிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ்200 பணத்தை பறித்துச் சென்றார்.
இது குறித்து கொடியரசு சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ் என்கின்ற தமிழ்செல்வனை கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.