நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடையும் : ஆதித் தமிழர் தலைவர் பேட்டி

0 218
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11  நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிஜேபி கூட்டணி முழுமையாக தோல்வி அடையும் – ஆதி தமிழர் பேரவை தலைவர் பேட்டி

ஆதித்தமிழர் பேரவை திருச்சி மத்திய மண்டலம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியை ஆதரிப்போம், பிஜேபி கூட்டணியை விரட்டியடிப்போம் என்று ஒருமித்த கருத்துடன் கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு பின் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் …

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆதி தமிழர் பேரவை திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் இருக்கக்கூடிய இந்தியா கூட்டணிக்கு ஆதரவை தெரிவிக்கிறோம்.

இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிஜேபி ஆர்எஸ்எஸ் கூட்டணி முழுமையாக தோல்வியடையும், எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் வாங்குவதற்கான முயற்சி தான் அவர்கள் எடுக்க வேண்டும்.

சென்னை, தூத்துக்குடி நெல்லை ஆகிய பகுதிகளில் இயற்கை சீற்றத்தால் பேரிழப்பு ஏற்பட்டு 37 ஆயிரம் கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு பட்டியல் அனுப்பியது. ஆனால் இதுவரை ஒரு சல்லி காசு கூட தமிழகத்துக்கு ஒன்றிய அரசு வழங்கவில்லை. இந்நிலையில் பாரத பிரதமர் மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார் அவர் எந்த அடிப்படையில் எந்த முகத்துடன் இங்கு வருகிறார் என்பது தெரியவில்லை

2014 ஆம் ஆண்டு மோடி அளித்த வாக்குறுதியில் கருப்பு பணம், ஊழலை ஒழிப்பேன் என்று பல்வேறு வாக்குறுதிகளை சொன்னார். ஆனால் இதற்கு நேர் மாறாக ஒன்றிய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது

பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தன்னுடைய நண்பர்களுக்கு தாரை வார்த்து விட்டார்.

10 ஆண்டுகளில் இதை நாங்கள் சாதித்து இருக்கிறோம் என்று எதையாவது மோடி அரசு சொல்லிவிட முடியுமா ? ஊழலில் நம்பர் ஒன் அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.

தேர்தல் வருகிறது என்பதால் கேஸ் விலை 100 ரூபாய் குறைத்திருக்கிறார்கள் தேர்தல் முடிந்தவுடன் 500 ரூபாய் ஏற்றி விடுவார்கள்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எல்லாம் அகவிலைப்படி உயர்வு எல்லாம் திடீர் என உயர்கிறது தேர்தல் நெருங்குவதால் இது போல் நிறைய நடைபெறும்.

தமிழகத்தில் போதைப்பொருள் அதிகமாகி விட்டது என அதிமுக போராட்டம் நடத்துகிறார்கள் ஆனால் போதைப் பொருள் குஜராத் துறைமுகத்திலிருந்து தான் வருகிறது. டன் கணக்கில் இந்தியா முழுவதும் அங்கிருந்துதான் சப்ளை செய்யப்படுகிறது இதை எதிர்த்து கேட்க எடப்பாடி பழனிச்சாமிக்கு திராணியும், தெம்பும் இருக்கிறதா ?

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அதே கூட்டணியில் ஆதி தமிழர் பேரவை பயணிக்கிறது.

இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதில் ஆதித்தமிழர் பங்கு அதிகமாக இருக்கும்.

இந்த கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ராசாத்தி அம்மாள், மாநகர செயலாளர் சுந்தர்ராஜ், மாநில தூய்மை தொழிலாளர் பிரிவு அறிவழகன், உறையூர் பகுதி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.