முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி

0 208
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் கொணலை கல்பாளையம் தி.மு.க. கிளைக்கழகம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் அமைச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் 2- ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி நடைபெற்றது. திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் முன்னிலை வகித்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கபாடி போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 70 அணியினர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசு ரூ.20,000ம், இரண்டாம் பரிசு ரூ.15,000ம், மூன்றாம் பரிசு ரூ.12000ம்,நான்காம் பரிசு ரூ.8,000 ம் வழங்கப்பட்டது. இந்த கபாடி போட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா இளையராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் அருள்தாஸ், மணிகண்டன், சிறப்பு விருந்தினர்கள் இளையராஜா, முகமது உசேன், மற்றும் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்டரிக் ராஜ்குமார் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.