மன உளைச்சலில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

0 280
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொணலையில் மன உளைச்சலில் கொத்தனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சமயபுரம் அருகே கொணலை காந்திகிராம் பகுதியைச் சேர்ந்தவர்  ராஜா(43) .இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார் இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் மன உளைச்சலில் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 9) இரவு 9:45 மணி அளவில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியில் கட்டியிருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.