காவேரி மகளிர் கல்லூரியில் நடந்த பெண்மையின் நலம் நிகழ்ச்சி

0 452
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11 உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நடந்த பெண்மையின் நலம் நிகழ்ச்சி – கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் என் எஸ் எஸ் குழு, காவேரி மகளிர் கல்லூரியில் என் எஸ் எஸ் அமைப்பு மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து “பெண்மையின் நலம்” என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரி கூட்டரங்கில் இன்று கொண்டாடப்பட்டது விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ரோட்டேரியன் ஆனந்த ஜோதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக டாக்டர் பத்மா ரித்தா பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்று சிறப்பு உரையாற்றினார். அதேபோல் டாக்டர் கீதா பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை வாயில் ஏற்படும் புற்றுநோய் குறித்து விளக்கி பேசினார்.

மேலும் டாக்டர் சசி சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாணவிகளிடம் விளக்கி கூறினார் மேலும் டாக்டர் பாரதி பாரம்பரிய உணவு வகைகளையும் அதன் பயன்பாடுகளையும் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாகியும், ரோட்டரி கிளப் ஆப் பட்டர்ஃபிளை சங்கத்தின் தலைவர் சுபா பிரபா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சியின் இறுதியாக ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளை சங்க செயலாளர் நன்றி கூறினார் இந்நிகழ்வில் காவிரி மகளிர் கல்லூரி என் எஸ் எஸ் திட்ட அலுவலர் முனைவர் நீலா உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் காவிரி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.