பள்ளி மாணவிக்கு சிங்கப்பெண் விருது

0 316
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 12 சமயபுரம் பள்ளி மாணவி கலை மற்றும் இலக்கியப் பிரிவில் 2024 ஆண்டுக்கான சிங்கப்பெண் விருது பெற்று அசத்தினார்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கலை மற்றும் இலக்கியப் பிரிவில் புதுச்சேரியில் வில்லியனூரில் நடைப்பெற்ற் 2024 ஆண்டுக்கான சிங்கப்பெண் விருது பெற்று அசத்தினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல துறைகளில் சாதித்து, உயர்ந்து வரும் 120 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு 2024 ஆண்டுக்கான
சிங்கப்பெண்விருதுகள் திறமைக்காக வழங்கப்பட்டது. இந்த விழா கடந்த மார்ச் 10 ஆம் தேதி புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஆச்சார்யா கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி சு.அ.யாழினிக்கு கலை மற்றும் இலக்கியப் பிரிவில் சிங்கப்பெண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கலை மற்றும் இலக்கியப் பிரிவில் சிங்கப்பெண் விருது பெற்றபள்ளி மாணவி சு.அ.யாழினியை பள்ளி் ஆசிரியர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.