திமுகவை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
திருச்சி, மார்ச் 12 தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட முசிறி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், துறையூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 12 இடங்களில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஸ்ரீரங்கம் பகுதி கழகச் செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிமுகலர் பலர் பங்கேற்றனர்.