பூவாளூரில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம்

0 315
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 12  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வரும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் 12 ந்தேதி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள திமுக அரசை கண்டித்து 12 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக லால்குடி ஒன்றியம் சார்பில் பூவாளூர் பேரூராட்சி அலுவலம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் லால்குடி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மாவட்ட,ஒன்றிய,நகர,பகுதி,கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.