லால்குடியில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம்
திருச்சி, மார்ச் 12 தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் MP குமார் தலைமையில், திருச்சி லால்குடி நகராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவரம்பூர், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 11 இடங்களில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.
திருச்சி லால்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.எம் பாலன், ஒன்றிய செயலாளர் அசோகன், நகர செயலாளர் பொன்னி சேகர், அவை தலைவர் அருணகிரி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ், பாசறை மாவட்ட செயலாளர் வி.டி.எம் அருண் நேரு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.