சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு : வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

0 241
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 15  தொட்டியம் அருகே திருச்சி சேலம் புறவழி சாலையில் அமைக்கும் சுங்க சாவடிக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு – அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திருச்சி சேலம் புறவழி சாலையில் சுங்கம்சாவடி அமைப்பதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் திருச்சி சேலம் புறவழி சாலையில் தொட்டியம் அடுத்த ஏலூர்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாராச்சிப்பட்டி மேடு என்ற இடத்தில் புதிய சுங்க சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்த சுங்க சாவடியை அப்பகுதியில் அமைக்க கூடாது, அதனை அகற்ற வேண்டும் என கூறி விவசாய முன்னேற்ற கழகம், வளையப்பட்டி கார் ஓட்டுநர்கள் சங்கம், மற்றும் உரிமையாளர்கள் சங்கம், உண்மை உழைப்பு உயர்வு நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன நல சங்கம், ஏரி, குளம், குட்டை, கால்வாய் அமைப்பு நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுருத்தியதுடன்
போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக தொட்டியம் வட்டாட்சியர் அருள்ஜோதி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது
கோரிக்கை தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பதில் அளிக்கப்படும் என கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் சுங்க சாவடி அமைக்கும் பகுதியில் மாபெரும் முற்றுகை மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாக கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நபர்கள் தெரிவித்து சென்றனர், இதனால் தொட்டியம் தாலுக்கா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.