புதிய பேருந்து சேவை : எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்
திருச்சி, மார்ச் 16 திருச்சியிலிருந்து பூண்டி மாதா கோவில், தஞ்சை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வரை செல்லும் புதிய வட்ட பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பொது மக்களின் பயன்பாட்டிற்காக உறையூர், பாலக்கரை, பூண்டி மாதா கோவில், தஞ்சை, திருவாரூர் மற்றும் வேளாங்கண்ணி வரை செல்லும் வட்ட பேருந்து சேவையை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், மணிமேகலை, ராஜபாண்டி, வட்ட செயலாளர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் அரசு போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.