நாடாளுமன்ற தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்ட ஆட்சியர் தகவல்

0 277
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16 நாடாளுமன்ற தேர்தல் 7கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  மக்களவைத் தேர்தல் நடத்த திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை போதுமான அளவில் உள்ளது.

பணப்பட்டுவாடா உங்களிடம் புகார்களை தெரிவிக்க 18005995669 என்கிற டோல் ஃப்ரீ எண்ணும்,
6384001585 என்கிற வாட்ஸ் அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் தெரிவித்தால் 100 நிமிடங்களுக்குள் ஆய்வு செய்து புகாருக்கான பதில் அறிக்கை அளிக்கப்படும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.