இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு
திருச்சி, மார்ச் 16 திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வெள்ளூர் ஊராட்சி மூவேலியில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இதில் சாலப்பட்டியைச் சேர்ந்த சுமார் 300 காடுகள் மூவேலியில் பொருட்கள் வாங்கி வந்தனர். இவர்கள் சாலப்பட்டியில் பொருட்கள் வாங்க கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாலப்பட்டியில் புதிய ரேஷன் கடை இடம் மாற்றம் செய்யப்பட்டு துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவிற்கு திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வைத்து புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அதே சமயம் கூட்டுறவு சார்பதிவாளர் வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் வைதேகி வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏ ஆர் கே கார்த்திக் மூர்த்தி கோபால் அண்ணாதுரை முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் விற்பனையாளர் பிரகாஷ் நன்றி கூறினார் இடமாற்றத்திற்கு ஏற்பாடுகளை செயலாளர் சுந்தரராசு செய்திருந்தார்.