பெரம்பலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டி : பாரிவேந்தர் பேட்டி
திருச்சி, மார்ச் 18 திருச்சியில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பேட்டி:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். பா.ஜ.க கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவது ஒரு திட்டம் தான். 40 எம்பிக்களை வைத்துள்ளவர்களும் நன்கொடை வாங்குகி உள்ளார்கள். 300 எம்.பிக்களை வைத்துள்ளவர்களும் அவர்கள் சக்திக்கு ஏற்ப நன்கொடை பெற்றுள்ளார்கள்.
தேர்தல் பத்திரம் மூலம் அதிக நிதி பெற்றுள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது எங்களுக்கு எந்தவித முரண்பாடாகவும் தெரியவில்லை.
எல்லா கட்சிகளும் தேர்தலில் தனியாகத்தான் போட்டியிட வேண்டும் என்பது என் தனிப்பட்ட நிலைப்பாடு. அப்பொழுதுதான் அவரவர் கட்சியின் சக்தி வெளியில் தெரியும்