மனைவி கண்டித்ததால் விவசாயி தற்கொலை

0 396
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கொள்ளுக்கட்டிபாளையத்தில் மனைவி கண்டித்ததால் கடந்த 15 ம் தேதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி  திருப்பஞ்சலி குருவம்பட்டி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் சடலமாக போலீசார் மீட்டனர்..

முசிறி தாலுக்கா ஏவூர் அய்யம்பாளையம் கொள்ளுக்கட்டி பாளையத்தை சேர்ந்தவர்  நாகராஜ் (50)  இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு அடிக்கடி தீராத தலைவலி இருந்துள்ளது. இதனால் இவர் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இதனை அவரது மனைவி மருத்துவரிடம் செல்லாமல் மாத்திரை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தால் உடம்பு என்ன ஆகும் என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்ட நாகராஜ் கடந்த 15 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலையில் திருப்பைஞ்சீலி குருவம்பட்டி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வாயில் நுரை தள்ளியவாறு சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் இச்சம்வம் குறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லதுவேறு ஏதும் காரணமா ,எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.