புனித தொன்போஸ்கோ பள்ளி ஆண்டு விழா

0 335
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 20  திருச்சி மாவட்டம் லால்குடி மணக்காலில் உள்ள புனித தொன்போஸ்கோ உயர் நிலை பள்ளியில் 31 ம் ஆண்டு ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

லால்குடி மணக்காலில் உள்ள புனித தொன்போஸ்கோ உயர் நிலை பள்ளியில் 31ம் ஆண்டு ஆண்டுவிழா நடைப்பெற்றது. பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை,ஓவியம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.இவ்விழாவில் பள்ளியின் அருட் தந்தை ஜோசப் ,ஜூடு ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்நது போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு லால்குடி கிளை நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். பள்ளி ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியர் அருள்தாஸ் வாசித்தார்.உதவி தலைமை ஆசிரியர் வினோத் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நன்றியுரையை கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.