முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை

0 251
Stalin trichy visit

புதுக்கோட்டை, மார்ச் 21  புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை ஆறு மணி முதல் திடீர் சோதனை செய்து வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் இலுப்பூர் இல்லத்தில் மூன்று வாகனத்தில் வந்த அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்3 இன்னோவா காரில் வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை எதிர்க்கட்சிகளை முடக்கும் வகையில் ஏவப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுக, பாஜக இடையே கடும் வார்த்தைப் போர் முற்றி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் நடக்கும் சோதனை தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.