டாஸ்மாக் கடையில் மாசு கலந்த குப்பை பீர்: மதுப்பிரியர் அதிருப்தி

0 637
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22 திருச்சி மாவட்டம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பொன்னகர் பகுதியில் அரசு உயர் ரக (எலெக்ட்) மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் உள்ள மது பாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த உயரக மதுபான கடையில் மது பிரியர் பீர் வாங்கியுள்ளார். அந்த பீர் பாட்டிலில் அழுக்கு நிறைந்த குப்பைகள் போன்று பாட்டிலாக பீரில் இருந்துள்ளது. உடனே இது குறித்து உயரக மதுபான கடை ஊழியர்களிடம் கேட்டபோது இது சாதாரண விஷயம் எப்பயாவது இதுபோன்று நடக்கும் இதை குடித்தால் வயிற்றுப்போக்கு மட்டும் தான் ஏற்படும். வேண்டுமென்றால் அந்த பாட்டில் உள்ள நம்பருக்கு போன் செய்து புகார் தெரிவியுங்கள் என்று தெரிவித்துள்ளார் இதனை அடுத்து அந்த மதுபிரியர் பீர் பாட்டிலில் உள்ள நம்பருக்கு அழைத்தால் தொடர்பு கொள்ள முடியாது என்ற வந்துள்ளது மேலும் மதுபான கடை ஊழியரிடம் கேட்ட பொழுது மேலாளர் தொலைபேசி எண்ணை கொடுத்தார் அந்த நம்பரும் உபயோகத்தில் இல்லை என்று வந்துள்ளது இதனால் அந்த மது பிரியர் நின்றிருந்தார் தொலைபேசி எண்ணை கொடுத்தார் அந்த நம்பரும் உபயோகத்தில் இல்லை என்று வந்துள்ளது இதனால் செய்வதறியாது அந்த இளைஞர் நின்றிருந்தார்.

இது குறித்து அந்தமதுப்பிரியர்  கூறும் போது… நான் மது போதையில் இல்லாமல் இந்த பீர் பாட்டில் வாங்கியதால் எனக்குத் தெரிந்தது இது மது போதையில் இருந்திருந்தால் இதை நான் பார்க்காமல் குடிதிருப்பேன் ஏதாவது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் மேலும் இரவு நேரம் என்றால் சுத்தமாக யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து வாங்குகிறார்கள் ஆனால் இதுபோன்று இருந்தால் என்ன செய்வது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.