திருச்சி தேவர் ஹாலில் கலைஞர் 103 ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது

0 11
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 8 முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட கருத்தரங்கம் திருச்சி  திருச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவர் ஹாலில்   நேற்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி சிறப்பு உரை ஆற்றினார்.

மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்

“கலைஞரின் எத்தனை கலைஞர்” கருத்தரங்கம்:

விழாவின் முக்கிய நிகழ்வாக “கலைஞரின் எத்தனை கலைஞர்” என்ற தலைப்பில் கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் முன்னணி கவிஞர்கள் பங்கேற்று கலைஞரின் பன்முகத்தன்மையை பின்வரும் தலைப்புகளில் போற்றிப் புகழாரம் சூட்டினர்.

கவி அரங்கத் தலைவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா இலக்கிய இமயம்: கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி திரை தமிழ் சிற்பி: கவிஞர் அருண் பாரதி சமூகப் போராளி: கவிஞர் ராகவ் ரமேஷ் அரசியல் சாணக்கியர்: கவிஞர் தஞ்சை இனியன் நிகழ்ச்சியின் நிறைவாக, மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் ஆர். ஜி. பாபு அனைவருக்கும் நன்றி உரை ஆற்றினார்கள்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க-இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் , மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.