கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

0 238
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 26  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கிய படி கிடந்த 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை நேற்று மாலை 6 மணி அளவில் கொள்ளிடம் போலீசார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் சடலம் குறித்து அக்கம் பக்கம் விசாரித்தார்.ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. பின்னர் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் எதற்காக இங்கு வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.