ரூ.10 லட்சம் கையாடல்: தனியார் வங்கி மேலாளர் கைது

0 16
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  திருவெறும்பூர் அருகே ரூ.10 லட்சம் கையாடல்; தனியார் வங்கி மேலாளர் கைது
திருச்சி மாவட்டம் திருவெ றும்பூர் அருகே உள்ள வாழ வந்தான் கோட்டையில் தனி யார் வங்கி கிளை உள்ளது. இங்கு குண்டூர் பர்மா கால னியை சேர்ந்த அப்பாஸ் மகன் முகமது ராஜா என்ப வர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 21 பெண்க ளிடம் ரூ.50 ஆயிரம் வீதம் கடன் வாங்கி தருவதாக் ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படம், வங்கி கணக்குபுத்தகம் ஆகியவைகளை பெற் றுள்ளார். பின்னர் அவர் வேறு பெயர்களில் போலி கணக்கு தொடங்கி சுமார் |ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் கையாடல் செய்தும், 10 பேர் கடனை முடிக்க கொடுத்த ரூ.90 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் அதையும் கையாடல்செய்து. பொதுமக்களையும் தான் பணிபுரியும் வங்கியின் உயர் அதிகாரிகளையும் ஏமாற்றி. உள்ளார்.

இந்த விவகாரம் வங்கியின் தலைமையகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து வங் கியின் கோட்ட மேலாளர் சுகுமார் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத் தார். மேலும் இது தொடர் பாக நடவடிக்கை எடுக்க கோர்ட்டிலும் புகார் செய்யப் பட்டது.அதன் பேரில் துவாக் குடிபோ போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நாகராஜ் விசாரணை நடத்தி முகமது ராஜாவை கைது செய்தார். பின்னர் அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறை யில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.