மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை

0 495
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 27  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அக்கரைபட்டியில் அதிகளவில் கடன்களை வாங்கிய கணவனை மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் அருகே தேவிமங்கலம் அக்கரைபட்டியைச் சேர்ந்தவர்  ஜெயக்குமார்(61). இவர் இருங்களுர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி குழுமத்தில் பாதுகாவராக வேலை செய்து வந்துள்ளார். மனைவிக்கு தெரியாமல் அதிகளவில் கடன்களை  பெற்றுள்ளார் .இது குறித்து அவரது மனைவி கணவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கணவர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயர்ந்தார்.

இது குறித்து அவரது மனைவி சிறுகனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.