சமயபுரத்தில் வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0 210
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 27  திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் இருந்த வட மாநில வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

மேற்குவங்க மாநிலம், க்ளிம்போங், புடுங்கி கச்மகல், சுங்கிடுங் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான ஜான்மகர். இவர் சமயபுரத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் கடந்த ஆறு மாதமாக சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக அவரது மனைவிக்கும் இவருக்கும் செல்போனில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த அவர் செல்போனை உடைத்துள்ளார்.மேலும் கடந்த மூன்று நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று உணவு விடுதியில் வேலைக்கு வரவில்லை.இதனால் கடை உரிமையாளர் ஜனார்த்தன் என்ற ஊழியரை அனுப்பி வீட்டில் பார்த்து வரச் சொல்லி உள்ளார். அவர் அங்கு சென்று பார்த்போது சமையல் மாஸ்டர் தங்கி இருந்த வாடகை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.