மணப்பாறை அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.96 லட்சம் பணம் பறிமுதல்

0 311
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 27  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி ஆத்துப்பாலம் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3.45 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதே போல் பன்னாங்கொம்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனனத்தில் சென்ற கன்னிவடுகபட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 51950 ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 96 ஆயிரத்து 590 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் மணப்பாறை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.