ம.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு
திருச்சி மார்ச் 27 திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மறுமலர்ச்சி திமுக சார்பில் நான் போட்டியிடும் நிலையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் நாடாளுமன்ற தொகுதிக்கான தலைமை தேர்தல் பணிமனை திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டு வருகின்றது.
தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் துரை வைகோ வழங்கினார்.
இந்நிகழ்வில், மதுரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா. சோமு, மணவை தமிழ்மாணிக்கம், மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப. த. ஆசைத்தம்பி, மாநில மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.