அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி மறை மாவட்ட பேராயரை சந்தித்து ஆசி பெற்றார்

0 414
Stalin trichy visit

திருச்சி நாடாளுமன்ற  வேட்பாளர் கருப்பையா திருச்சி மறை மாவட்ட பேராயரை சந்தித்து ஆசி பெற்றார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக  வேட்பாளர் கருப்பையா இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், துணை மேயர் சீனிவாசன் ஏற்பாட்டில், திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா, திருச்சி, மேலப்புதூர், புனித மரியன்னை பேராலய வளாகத்தில் உள்ள பேராயர் இல்லத்தில், திருச்சி மறை மாவட்ட பேராயர் (பிஷப்) ஆரோக்கியராஜ்,
அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார்.

அவருக்கு, பேராயர் ஆரோக்கியராஜ் பிரார்த்தனை செய்து ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கருப்பையா குறித்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேராயர் கேட்டறிந்தார். மேலும் அதிமுக வேட்பாளர் கருப்பையா வெற்றி பெற பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.