மணப்பாறையில் அனைவரின் கவனம் ஈர்த்த தாஜ்மகால்

0 197
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 29  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் அமைச்சர் கே. என். நேருவின் தம்பி மறந்த ராமஜெயம் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்காக பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடையில் தாஜ் மகால் போன்று பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளைவுட் மற்றும் விளம்பர பதாகைகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

 

மணப்பாறை முன்னாள் நகர துணைச் செயலாளர் ஏ.பி.சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாலா ஆகியோர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.