துறையூரில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

0 325
Stalin trichy visit

திருச்சி, ஏப்.4  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த அம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வெள்ளையம்மாள் தம்பதியினர் இவர்களது மகன் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு ஊரில் விவசாயம் செய்து வருகிறார் இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து முடித்த உறவு பெண்னிற்க்கும் காதல் ஏற்பட்டுள்ளது இவர்கள் காதல் திருமணத்தை இரு வீட்டார் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்வதற்காக துறையூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது இந்நிலையில் நேற்று மாலை நிச்சயதார்த்தம் போன்ற திருமண சம்பிரதாயங்கள் மண்டபத்திலே நடந்துள்ளது இரவு மணமகன் மணமகள் மற்றும் இரு வீட்டுரும் மண்டபத்தில் தங்கி உள்ளனர் இது பற்றி சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நள்ளிரவில் அதிகாரிகள் திருமண மண்டபத்தில் நுழைந்து மணமகள் மற்றும் மணமகனே அழைத்துச் சென்று விசாரித்ததில் மணமகள் இன்னும் திருமண வயது எட்டவில்லை எனவும் திருமண வயதிற்கான காலம் 60 நாட்கள் உள்ளதாகவும் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினார் இதனால் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.