திருச்சி புனித வளனார் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவுநாள் அனுசரிப்பு

0 17
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 28 திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவரும், மறைந்த ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய கல்லூரி மாணவர்கள்

திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவரும், விஞ்ஞானியுமான, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள டவுலோஸ் அரீனா அரங்கில் இயற்பியல் துறை சார்பில்  முன்னாள் மாணவர் அப்துல் கலாம்  நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களிடையே அப்துல் கலாம் பற்றி உரையாற்றினார். முன்னதாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  உருவப்படத்திற்கு கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கல்லூரி மாணவர்களும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.