சரக்கு லாரியில் கஞ்சா கடத்தியவர் கைது
திருச்சி, ஏப். 12 திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் நேற்றிரவு சமயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையின் போது பதிவெண் இல்லாமல் வந்த சரக்கு லாரியை மடக்கி சோதனை செய்து போது கஞ்சா கடத்தி வந்த வாலிபரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை காவலர்கள் பிரபாகர் மற்றும் தசரதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவெண் இல்லாமல் வந்த சரக்கு லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது அதில் 24 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது பின்னர் லாரி டிரைவரை பிடித்து விசாரணை செய்ததில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற குளித்தலை சுரேஷ் என தெரிய வந்தது மேலும் ஆந்திராவிலிருந்து திண்டுக்கல்லுக்கு கஞ்சாவை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது .
பின்னர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் சுரேஷ் என்கின்ற குளித்தலை சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்டுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் கஞ்சா கடத்தி வரப்பட்ட லாரி மற்றும் 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.