பா.ஜ.க ஆட்சியை அகற்ற தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் : அமைச்சர் அன்பில் மகேஸ் பரப்புரை
திருச்சி, ஏப். 11 திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி மாநகரம், காட்டூர் பகுதியில் தி.மு.க. தலைமையிலான இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரைவைகோவை ஆதரித்து மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமையில் காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க காட்டூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், திராவிட மாடல் அரசு பெண்கள் தான் நாட்டின் கண்கள் என பெண்களின் முன்னேற்றத்திற்கு படிக்கின்ற குழந்தைகள் முதல் மகளிர் வரை மகளிர்க்கு என பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது. பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் தீப்பெட்டி. இரவு மணி 10 ஆனது நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்கின்றோம் நீங்கள் வருகின்ற 19 ஆம் தேதி துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து பா.ஜ.க. ஆட்சியை முடித்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் செங்குட்டுவன், பொன் செல்லையா மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், செந்தில், கார்த்தி, தாஜுதீன், வட்டக் கழகச் செயலாளர்கள் விஸ்வநாதன், தவசீலன், மன்சூர், தமிழ்மணி, சிவசக்தி, கார்த்தி, முருகானந்தம், முருகானந்தம், சுரேஷ், ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.