மண் வள பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம்

0 241
Stalin trichy visit

திருச்சி, ஏப். 23  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மண் வள பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மண் மாதிரிகள் சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

இதில் திருச்சி மண் ஆய்வகத்தின் மூத்த வேளாண்மை அலுவலர் நாகராஜன் மண் மாதிரிகள் சேகரிப்பு முறைகள் பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும், மண் மாதிரிகள் சேகரிப்பு வலைத்தள பதிவேற்றம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர்கள் பார்த்திபன், பாஸ்கர், பாபு, பன்னீர்செல்வம் கதிரேசன் மற்றும் தனலெட்சுமி வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.