அரசு பேருந்தில் இருக்கை கழன்று தூக்கி வீசப்பட்ட நடத்துநர்

0 277
Stalin trichy visit

திருச்சி, ஏப். 24 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசுப் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து புறப்பட்டு கலையரங்கம் பகுதி வழியாக சென்று வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்தின் கண்டக்டர் இருக்கை நெட்டு போல்டு கழன்று அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். உடனே ஓட்டுநர் பேருந்தை பஸ்சை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த இருந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு அரசு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் பேருந்து ஓட்டுநர் கிடந்த இருக்கையை எடுத்து பேருந்துக்குள் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். நல்வாய்ப்பாக நடத்துநர் சாலையில் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.
ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave A Reply

Your email address will not be published.