வடமாநிலங்களுக்கு பிரச்சாரத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 333
Stalin trichy visit

18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நடைபெற்றது. மேலும் 6 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இண்டியா கூட்டணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் மு.க ஸ்டாலின். இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடக்க இருப்பதால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர் பிரச்சாரம் மேற்செய்ய இருப்பதாகவும், சுற்றுப்பயண விவரம் தயாராகி வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.