அதிமுக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

0 198
Stalin trichy visit

திருச்சி, ஏப். 26  திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் கோடைகால நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து – பொதுமக்களுக்கு பழ வகைகள் உடன் கூடிய நீர் மோர் வழங்கினார்.

வெயிலில் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்டம் தோறும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில், கோடைகால நீர் மோர் பந்தலை திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

அப்போது, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளும், சர்பத், ஜூஸ் வகைகள், நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும், கடும் வெயிலில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும் வெள்ளரி, ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, பகுதி கழக செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, பூபதி, அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.