கடன் தொல்லையால் முறுக்கு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

0 267
Stalin trichy visit

திருச்சி, ஏப். 26 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த முறுக்கு வியாபாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கீழக்கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான பாண்டி. இவருக்கு திருமணம் ஆகி அபிராமி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பாண்டி சிறுதொழிலான முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் பாண்டிக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பாண்டி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மிகுந்த மன உளைச்சல் அஅடைந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.