வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது

0 662
Stalin trichy visit

திருச்சி, மே 2  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தென்புறநாடு ஊராட்சி பச்சைமலை பகுதியில் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவின் பேரில் துறையூர் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வன அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட காப்பு காட்டு பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் திரிவதை கண்டு அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் தென்புறநாடு ஊராட்சி பச்சைமலை கருவங்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (42) என்பதும் ,உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியுடன் காப்பு காட்டுப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லட்சுமணனிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.